Canada

கனடா தோ்தல்; பெரும்பான்மையுடன் ட்ரூடோ மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு!

 

 

கனடா நாடாளுமன்றத் தோ்தல் வாக்களிப்பு பெரும்பாலும் நிறைவடைந்துள்ள நிலையில் முதல்கட்ட முடிவுகளின் பிராகாரம் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆசியமைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சற்று முன்னர் வரையான முன்னணி நிலவரங்களின் பிரகாரம் லிபரல் கட்சி 157  இடங்களில் முன்னிலையில் உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேடிப் 121  இடங்களில் முன்னலை பெற்றுள்ளது.

அத்துடன், பிளாக் கியூபெகோயிஸ் 31 இடங்களிலும் என்.டி.பி. 27 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பசுமைக் கட்சி 2 இடங்களில் முன்னிலையில் உள்ள அதேவேளை, கனடா மக்கள் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை.

கனடா நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 ஆசனங்களிர் பெரும்பான்மை ஆட்சி அமைக்கத் தேவையான 170 இடங்களை லிபரல் கட்சி நெருங்கி வருகிறது.ட அ அவ்வாறு பெரும்பான்மைக்குத் தேவையாக இடங்களைப் பெற சில ஆசனங்கள் குறைந்தாலும் ஏதாவது ஒரு சிறிய கட்சியின் ஆதரவுடன் பெரும்பான்மையை பெறுவதற்கான சந்தர்பமே காணப்படுகிறது.

முன்னணி தோ்தல் முடிவுகளின் பிரகாரம் கடந்த 2019 தோ்தலில் பெற்றுக்கொண்டதை விட லிபரல் ஆதரவு அதிகரித்துள்ளது. கடந்த தோ்தலை விட ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியினர் அதிக ஆவனங்களைப் பெற்றுக்கொள்வதற்கான போக்கு தென்படுகிறது.

அக்டோபர் 2019 இல் இடம்பெற்ற கனடா நாடாளுமன்றத் தோ்தலில் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசு பெரும்பான்மை பெறவில்லை.

சிறுபான்மை அரசுடன் கடும் நெருக்கடிகளின் மத்தியில் பிரதமர் ட்ரூடோ ஆட்சி செய்துவந்தார். எனினும் தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் முக்கிய திட்டங்களை நிறைவேற்ற அவர் எதிர்க்கட்சிகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

இந்நிலையில் இன்னும் இரண்டு வருட ஆட்சிக் காலம் இருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து முன்கூட்டிய தோ்தலுக்கு ட்ரூடோ அழைப்பு விடுத்தார்.

இன்னிலையில் நேற்று இடம்பெற்ற தோ்தலில் லிபரல் கட்சியினர் தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையில் மூன்றாவது முறையாக கனடா பிரதமராக ட்ரூடோ பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடா நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் எதாவது ஒரு கட்சி 170 இடங்களைப் பிடித்தால் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும். கடந்த தேர்தலில் ட்ரூடோவின் கட்சி 155 இடங்களை மட்டுமே வென்று சிறுபான்மை அரசை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top