Canada

கனடா நாடாளுமன்றத் தேர்தல் இன்று; ட்ரூடோ தலைமையில் மீண்டும் ஆட்சி அமையுமா?!

கனடா நாடாளுமன்றத் தோ்தல் இன்று திங்கட்கிழமை இடம்பெற நிலையில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் 2019 இல் இடம்பெற்ற கனடா நாடாளுமன்றத் தோ்தலில் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசு பெரும்பான்மை பெறவில்லை.

சிறுபான்மை அரசுடன் கடும் நெருக்கடிகளின் மத்தியில் பிரதமர் ட்ரூடோ ஆட்சி செய்துவந்தார். எனினும் தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் முக்கிய திட்டங்களை நிறைவேற்ற அவர் எதிர்க்கட்சிகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

இந்நிலையில் இன்னும் இரண்டு வருட ஆட்சிக் காலம் இருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து முன்கூட்டிய தோ்தலுக்கு ட்ரூடோ அழைப்பு விடுத்தார்.

இன்று இடம்பெறும் தேர்தலில் பெரும்பான்மை பெற்றால் மூன்றாவது முறையாக கனடா பிரதமராக ட்ரூடோ பொறுப்பேற்பார்.

கனடா நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் 170 இடங்களைப் பிடித்தால் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும். கடந்த தேர்தலில் ட்ரூடோவின் கட்சிக்கு 155 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் ஆளும் லிபரல் கட்சிக்கும் பிராதான எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் எனக் கூறுகின்றன. மிகச் சிறிய வித்தியாசத்திலேயே ட்ரூடோ தலைமையிலான லிபரல்ட கட்சி முன்னிலை பெற்றுள்ளதாகவும் கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன.

இவ்வாறான நிலையில் மீண்டும் லிபரல் கட்சி தலைமையிலான சிறுபான்மை அரசு அமையுமானால் பாராளுமன்றத்தில் முக்கிய திட்டங்களை நிறைவேற்ற பிரதமர் ட்ரூடோ தொடர்ந்தும் எதிர்க்கட்சிகளையே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தற்போதைய கணிப்புக்களின் பிரகாரம் கியூபெக் மற்றும் ஒன்ராறியோ போன்ற அதிக வாக்காளர்களைக் கொண்ட மாகாணங்களில் லிபரல் கட்சியினர் முன்னணியில் உள்ளனர், இது கட்சிக்கு ஒரு சாதகமான நன்மையை அளிக்கிறது என்று கருத்துக் கணிப்பாளர்கள் கூறுகின்றனர்.

அல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் போன்ற தங்கள் பாரம்பரிய கோட்டைகளில் கன்சர்வேடிவ்கள் முன்னணியில் உள்ளனர்.

ஜக்மீத் சிங் தலைமையிலான இடதுசாரி புதிய ஜனநாயகக் கட்சிக்கும் இந்தத் தோ்தலில் கணிகமான ஆதரவு அதிகரிக்கும் என கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top