News

பிரித்தானியாவில் புதிதாக 31,564 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 203 பேர் உயிரிழப்பு

 

 

அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரித்தானியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,564 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அங்கு இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 74 இலட்சத்து 96 ஆயிரத்து 543 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 203 பேர் உயிரிழந்துள்ள நிரையில் இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 35 ஆயிரத்து 455 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 32,678 பேர் குணமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top