மாவீரர்களை நினைவேந்திய பீற்றர் இளஞ்செழியன் கைது

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களை நினைவுகூர முற்பட்ட பீற்றர் இளஞ்செழியன் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பாரிய தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், தடைகளை உடைத்து பல்வேறு இடங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
முல்லைத்தீவு கடற்கரையில் சுடர் ஏற்றுவதற்காக சென்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், வாலிபர் முன்னணி பொருளாளருமான பீற்றர் இளஞ்செழியன் மற்றும் அவரது மனைவி உட்பட பலர் சுடர் ஏற்றுவதற்காக சென்ற போது முல்லைத்தீவு கடற்கரையில் வைத்து பீற்றர் இளஞ்செழியனை முல்லைத்தீவு காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
இதன்போது பீற்றர் இளஞ்செழியன் கைதுசெய்யப்படுவதை தடுக்க முயன்ற மனைவி மீது பொலிஸார் வன்முறை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.