News

மெக்சிகோ: சாலையோர கட்டிடம் மீது பஸ் மோதி விபத்து – 19 பேர் பலி, 32 பேர் படுகாயம்

.

மெக்சிகோவில் சாலையோர கட்டிடம் மீது பஸ் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் உள்ள மிசோகன் நகரில் இருந்து  சுற்றுலா பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50 மேற்பட்டோர் பயணம் செய்தனர். ஷலம் நகரில் உள்ள கிறிஸ்தவ மத தேவாலயத்திற்கு இவர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், மெக்சிகோ சிட்டியின் ஜோக்யூசின்கோ நகரில் உள்ள சாலையில் சென்றபோது பஸ்சின் பிரேக் பழுதானது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் அருகே இருந்த கட்டிடம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்தவர்களில் 19 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top