News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழு இந்தியாவிற்கு பயணம்!

 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கடந்த தினம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த சிலகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தது.

இதனடிப்படையில் எதிர்வரும் ஓரிரு தினங்களில் இரா.சம்பந்தன் தலைமையிலான தூதுக் குழுவொன்று இந்தியாவுக்குச் செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழுவில் இரா சம்பந்தனுடன் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் எம். ஏ.சுமந்திரன் ஆகியோரும் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top