News

ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் தடுப்பூசியை உருவாக்க வேண்டும் – பைசர் சிஇஓ பரிந்துரை

 

 

ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் தடுப்பூசியை உருவாக்க வேண்டும் என்று பைசர் சிஇஓ ஆல்பர்ட் போர்லா பரிந்துரைத்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள் பைசர் இன்க் நிறுவனம் தயாரிக்கும் பைசர் தடுப்பூசியை செலுத்துகின்றன. உலகம் முழுவதும் டெல்டா வைரஸ் மிகக் கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஒமைக்ரான் பாதிப்பு கடுமையாக உள்ளது.

ஒமைக்ரான் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் இஸ்ரேல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 4வது டோஸ் தடுப்பூசி செலுத்தி வருகிறது. இன்னும் சில நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிக்கான இடைவெளியைக் குறைத்து வருகிறது.

இந்த நிலையில் பைசர் நிறுவனத்தின் சிஇஓ ஆல்பர்ட் போர்லா அளித்துள்ள பேட்டியில், ‘4, 5 மாதங்களுக்கு ஒரு முறை கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்துவது நல்லது இல்லை. இதற்குப் பதிலாக ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் தடுப்பூசியை உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது மக்களும் அதைப் பின்பற்றுவர். எளிதில் நினைவில் கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை எடுத்துக் கொள்வர்.

மேலும் பொது சுகாதாரப் பார்வையிலும் இதுவே சிறந்த நடைமுறையாக இருக்க முடியும். ஆகையால், ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராகவும் போராடக் கூடிய தடுப்பூசியை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top