Canada

கல்கரியில் பொலிஸ் அதிகாரி இறப்பு: கனேடிய இளைஞருக்கு விதிக்கப்பட்ட தண்டனை

 

 

கல்கரியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி இறப்புக்கு காரணமாக வாகன விபத்தில், இளைஞர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கல்கரியில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி Andrew Harnett வாகனம் மோதி கொல்லப்பட்டார்.

குறித்த சம்பவத்தில் விசாரணை எதிர்கொண்டுவந்த 20 வயது இளைஞர் Amir Abdulrahman என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் சம்பவத்தின் போது பயணிகளுக்கான இருக்கையில் அமர்ந்திருந்ததாகவே தெரிய வந்துள்ளது. சம்பவத்தன்று அதிக வேகத்தில் சென்ற வாகனம் பொலிஸ் அதிகாரி Andrew Harnett மீது மோதியதுடன், அவரை சுமார் 437 மீற்றர் தொலைவுக்கு இழுதுச் சென்றுள்ளது.

அவருடன் பணி நேரத்தில் இருந்த இரு அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டும், ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சிகிச்சை பலனின்றி Andrew Harnett மரணமடைந்துள்ளார்.

இந்த வழக்கில் கைதான Amir Abdulrahman விசாரணைக் கைதியாக ஏற்கனவே 385 நாட்கள் சிறையில் இருந்துள்ளதால் இனி அவர் 3 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தால் போதுமானது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top