News

ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட ரஷ்ய ஆய்வாளர்: உளவு பார்த்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு

 

 

ஜேர்மன் பல்கலை ஒன்றில் முனைவர் பட்டப்படிப்பு பயின்றுகொண்டிருந்த ரஷ்ய ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த Ilnur Nagaev (29) என்பவர், ஜேர்மன் மாகாணமான பவேரியாவிலுள்ள Augsburg பல்கலையில் முனைவர் பட்டம் பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அதாவது 2019ஆம் ஆண்டு, ரஷ்யாவின் மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவரை Nagaev தொடர்ந்து சந்தித்துவந்துள்ளார். Nagaev அவருக்கு கொடுத்த தகவல்களுக்காக 2,500 யூரோக்கள் பணமும் பெற்றதாக கூறப்படுகிறது.

 

 

அதாவது, ஐரோப்பிய விண்வெளி ஏஜன்சியான European Space Agency (ESA), Ariane என்னும் ராக்கெட்களை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, Ariane 6 என்னும் ராக்கெட் ஒன்றை அது வடிவமைத்துள்ளது. அந்த ராக்கெட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், அதை உருவாக்கும் செலவு குறைவு. ஆனால், அது எடை அதிகமான பொருட்களையும் விண்வெளிக்கு சுமந்து செல்லக்கூடியது என்பதால், அடிக்கடி அதை விண்வெளிக்கு அனுப்பமுடியும்.

 

 

இந்த Ariane 6 குறித்த தகவல்களைத்தான் Nagaev ரஷ்ய உளவுத்துறைக்கு அளித்ததாக நம்பப்படுகிறது.

அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகும் நிலையில், Nagaev பல ஆண்டுகளை சிறையில் செலவிட இருப்பது உறுதி.

உக்ரைனை ஆக்ரமிக்கும் ரஷ்யாவின் முயற்சி காரணமாக, ஜேர்மனி முதலான பல நாடுகள் ரஷ்யா மீது கோபத்தில் இருக்கும் நிலையில் ரஷ்ய ஆய்வாளர் ஒருவர் மீது உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், இந்த விடயம் முக்கியத்துவம் வாய்ந்த்தாக கருதப்படுகிறது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top