விடுதலைப்புலிகளின் கொள்கைகளை முன்னெடுக்கும் புலம்பெயர் தமிழர்கள் – சிறிலங்கா அரசாங்கம் குற்றச்சாட்டு

குறிப்பிடத்தக்க அளவு புலம்பெயர்தமிழர்கள் விடுதலைப்புலிகளின் கொள்கைகளை தற்போதும் முன்னெடுத்து செல்வதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
விடுதலைப்புலிகள் இராணுவரீதியாக உள்நாட்டில் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் வெளிநாடுகளில் செயற்படுகின்றனர். அவர்களது ஆயுதங்கள் தற்போது தற்கொலை குண்டுகளும் ஆட்டிலறிகளும் இல்லை மாறாக பரப்புரை நீதிமன்ற நடவடிக்கைகள் -பிரசாரமே தற்போது அவர்களின் ஆயுதங்கள் .
ஆனால் அவர்களின் கொள்கை மாறவில்லை- தமிழீழம் என்ற தனிநாடு.குறிப்பிடத்தக்க அளவு புலம்பெயர்தமிழர்கள் விடுதலைப்புலிகளின் கொள்கைகளை முன்னெடுப்பதால் – வாக்குகளை பெறுவதற்காக அவர்களுக்கு ஆதரவளிக்கும்- தீர்மானங்களை எடுக்கும் நிலையில் உள்ளவர்களின் ஆதரவை அவர்களால் பெறமுடிகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.