News

ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவு; 15 பேர் உயிரிழப்பு

 

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் குனார் மாகாணத்தில் டுராண்ட் கோட்டு பகுதியில் இருந்து பாகிஸ்தானிற்குள் நுழைய சிலர் முயன்றுள்ளனர்.  இந்நிலையில், அந்த பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுதவிர 5 பேர் பனிச்சரிவில் சிக்கியுள்ளனர்.  அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.  அந்நாடு முழுவதும் பனிப்பொழிவு மற்றும் மழைப்பொழிவு ஏற்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக குளிர்காலத்தில் அதிக குளிர் காணப்படுகிறது.

இதற்கு முன் ஆப்கானிஸ்தானின் மேற்கே பனிச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top