News

உக்ரைனில் 70 ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

 

 

உக்ரைனில் 70 ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர்.

ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் தலைநகர் கிவ்வை ரஷிய படைகள் நெருங்கி வருகின்றன. தற்போது தாக்குதல் தீவிரமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உக்ரைனின் 70 ராணுவ தளங்களை அழித்துவிட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது. 11 விமானப்படைத்தளங்கள் உள்பட உக்ரைனின் 70 ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top