News

கனடாவில் புலம்பெயர்ந்த 14 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் திருப்பம்! இளைஞன் கைது

.

 

கனடாவில் சுட்டு கொல்லப்பட்ட 14 வயது புலம்பெயர்ந்த சிறுமி வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜமைக்காவை சேர்ந்தவர் Taffash Riley (14). இவர் தனது குடும்பத்தாருடன் கடந்த 2012ல் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.

இந்த நிலையில் கடந்த 1ஆம் திகதி இரவு 9 மணியளவில் Mississaugaவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் படிக்கட்டில் நடந்து வந்த போது மர்மமான முறையில் Taffash சுட்டு கொல்லப்பட்டார்.

இது தொடர்பில் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அதில் தொடர்புடைய 19 வயது இளைஞரான Michael Moncherry-Desir என்பவரை கைது செய்துள்ளனர்.

இதில் புதிய திருப்பமாக Michael-ஐ Taffash மற்றும் அவர் குடும்பத்தார் அனைவருக்கும் தெரியும் என கூறப்பட்ட நிலையில் Michael-ஐ தங்களுக்கு தெரியாது என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்ததற்கான சூழ்நிலைகள் மற்றும் காரணங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. தொடர் விசாரணைகள் நடைபெற்றும் வருகிறது, விரைவில் மர்மத்தின் முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top