News

சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதல்: 15 பேர் பலி – 20 பேர் காயம்

 

சோமாலியாவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் சமீப காலங்களில் அதிக அளவிலான தாக்குதல் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. இந்த சூழலில் சோமாலியாவின் ஹிரான் மாகாணத்தில் உள்ள பெலட்வெய்னே நகரத்தில் ஹாசன்திஃப் என்ற பிரபலமான திறந்தவெளி உணவகத்தில் இன்று மதியம் வழக்கம் போல பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.

அங்கு அதிக அளவிலான மக்கள் உணவருந்த வந்திருந்தனர். இந்நிலையில், திடீரென்று அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் அங்கிருந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். குண்டுவெடிப்பு தாக்குதலில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top