News

ஜெனீவா நிகழ்ச்சி நிரலில் முதலிடம் பிடிக்கவுள்ள உக்ரைன், இலங்கை விடயங்கள்

 

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில் தற்போதைய உக்ரைன் நெருக்கடி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் அதேவேளை , இலங்கை தொடர்பான விடயமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகிறது.

மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்(Michelle Bachelet) இன் சமீபத்திய அறிக்கை இலங்கை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

அரசாங்கத்தை இராணுவமயமாக்குதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச தரத்திற்கு கொண்டு வரத் தவறியமை, காவல்துறையினரின் காவலில் இருந்தவர்கள் கொல்லப்பட்டமை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை வெளியிடத் தவறியமை, போர்க்குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியமை என அறிக்கை அரசாங்கத்தை குற்றஞ்சாட்டியுள்ளது.

மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த தொன்மைகளை பாதுகாப்பதன் மூலம் சிறுபான்மையினரை காயப்படுத்துதல் என்ற விடயமும் முக்கியம் பெறுகிறது.

இதேவேளை, இலங்கைக்கு எதிராக மூன்றாவது ஜெனிவா பிரேரணையை கொண்டுவருவதற்கு பிரித்தானியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் தீர்மானித்துள்ளன.

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க இலங்கை அரசாங்கம் சார்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி அமைச்சர் அலி சப்ரி, பேராசிரியர் சன்ன ஜயசுமண மற்றும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் ஏற்கனவே ஜெனிவா சென்றுள்ளனர்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித், மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top