News

தமிழர் – சிங்களவர்களை இணைக்க புதிய திட்டம் – மனோ கணேசன்

 

சிங்களவர்களுடன் இணைந்து வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு வழிவகுக்கக்கூடிய ஆவணமொன்றைத் தொகுக்க முற்படுபவதாக தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு, தெற்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய 12 பேர் இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடவுள்ளனர்.

அதனூடாக சிங்கள சகோதர, சகோதரிகளுடன் இணைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு வழிவகுக்கக்கூடிய ஆவணமொன்றைத் தொகுக்க முற்படுகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

எமது நாட்டில் தமிழ்பேசும் மக்கள் கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்கி, தேசிய பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கான ஒரு கருவியாகத் தேசிய பாதுகாப்பைப் பயன்படுத்துவது முக்கியமானதொரு பிரச்சினையாகும். உள்நாட்டுப் போரின் போது அந்தக் கருவி தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது.

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் அது முஸ்லிம்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top