News

பிரான்சில் புதிதாக ஒரே நாளில் 2,14,542 பேருக்கு கொரோனா பாதிப்பு, 170 பேர் உயிரிழப்பு.

 

 

பிரான்ஸ் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,14,542 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் 4-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2.,14,542 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பிரான்சில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,06,02,932 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 170 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 377 ஆக உயர்ந்துள்ளது.

பிரான்சில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 1,40,40,177 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 64,30,378 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top