News

பிரான்ஸில் பதற்ற நிலை!! 7000 இற்கு மேற்பட்ட காவல்துறையினர் களமிறக்கம்

 

 

பிரான்ஸ் முழுவதிலும் இருந்து தலைநகர் பரிசை நோக்கிவரும் வாகனத்தொடரணிகள் இன்று இரவு தலைநகருக்குள் நுழையலாம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இவற்றை தலைநகருக்குள் நுழைய விடாமல் தடுத்துநிறுத்த 7000 இற்கு மேற்பட்ட காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் கடந்த இரண்டு வார காலமாக தீவிரப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாரஉந்து முற்றுகை போராட்டத்தை ஒத்த ஒரு போராட்டத்தை பரிஸ் நகரில் நடத்தும் நோக்குடன் நோக்கிய பாரஉந்து வாகன பேரணி நகர்ந்து வருகிறது.

கனேடிய தலைநகர் ஒட்டாவா கடந்த 10 நாட்களாக பாரஉந்துகளால் முடக்கப்பட்டதைபோல பரிஸ் நகரும் இன்று இரவு முடக்கபடக்கூடுமா? என்ற அச்சம் எழுந்த நிலையில், இவ்வாறான வாகனப் பேரணி தலைநகரில் தடைசெய்யப்படுவதாக பாரிஸ் காவல்துறை தலைமையகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

பிரான்சின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்காக வானகங்கள் ஐந்து பேரணிகளாக புறப்பட்டு பரிஸ் நகரை நோக்கி வந்து கொண்டிருக்கும் சுதந்திரத் தொடரணி என்ற அடையாளத்தில் நடத்தப்படும் இந்தப்பேரணிகளின் நோக்கம் இன்று இரவு பரிஸ் நகரையும் எதிர்வரும் திங்கட்கிழமை பெல்ஜியத்தில் பிரஸ்ஸல் நகரையும் முடக்கும் நோக்கம் கொண்டதாகும்.

ஏற்கனவே இந்தப் பேரணிகளுக்கு தடை உத்தரவுகள் போடப்பட்டிருந்தாலும், இந்த வாகன அணிகளின் இலக்கு தலைநகராக இருப்பதால் பதற்றம் நிலவிவருகிறது.

இந்தத் தடையை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை, 4,500 யூரோக்கள் அபராதம், வாகனத்தை பறிமுதல் செய்தல், உட்பட்ட தண்டணைகள் வழங்கபடும் என எச்சரிக்கட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top