News

பிரிட்டனில் 47 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா பாதிப்பு, 158 பேர்உயிரிழப்பு!

 

 

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 47 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 158 பேர் மரணமடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரையில் 1கோடியே 85 இலட்சத்து 46 ஆயிரத்து 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 இலட்சத்து 60 ஆயிரத்து 379 பேர் மரணமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 18 இலட்சத்து 66 ஆயிரத்து 80 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரித்தானியாவில் கொரோனாவால் 331 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 57 ஆயிரத்து 633 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 1 கோடியே 65 இலட்சத்து 19 ஆயிரத்து 746 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top