News

ரஷியாவின் அணு ஆயுத தடுப்புப்படைகள் தீவிர தயார் நிலையில் இருக்க வேண்டும் – அதிபர் புதின் அதிரடி உத்தரவால் பரபரப்பு

 

 

ரஷியா எந்த நிலையிலும் அணு ஆயுதத்தை கையில் எடுக்காது என்றே சர்வதேச நோக்கர்கள் கூறுகின்றனர்.

உக்ரைன் மீதான போரில் எந்த நாடும் நேரடியாக தலையிட்டால் வரலாற்றில் காணாத விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என்று கூறி ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மிரட்டல் விடுத்தார். அத்துடன் தங்களிடம் அணு ஆயுதம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

தற்போது ரஷியா மீது நேட்டோ நாடுகளின் பிடி இறுகி வருகிறது.

இந்த நிலையில், ரஷியாவின் அணு ஆயுத படை பிரிவினரை அதிபர் புதின் நேற்று உஷார்படுத்தி உள்ளார்.

அணு ஆயுத படை பிரிவினரை தயார் நிலையில் இருக்குமாறு ராணுவ மந்திரிக்கும், படைத்தளபதிக்கும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இருப்பினும் ரஷியா எந்த நிலையிலும் அணு ஆயுதத்தை கையில் எடுக்காது என்றே சர்வதேச நோக்கர்கள் கூறுகின்றனர். அப்படி கையில் எடுத்தால் அது 3-ம் உலகப்போராக மாறும் ஆபத்துக்கு வழிநடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top