News

ரஷியாவுடனான உலகளாவிய பண பரிவர்த்தனையை நிறுத்த திட்டம்? – அதிரடி காட்டும் ஐரோப்பிய யூனியன்

 

உலகளாவிய பண பரிவர்த்தனை அமைப்பில் இருந்து ரஷியாவை தடை செய்ய ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு நாட்டின் எல்லையை தாண்டி நடைபெறும் பண பரிவர்த்தனையை சுமூகமாக நடைமுறை படுத்த 1973-ம் ஆண்டு ஷிப்ட் (Swift) என்ற அமைப்பு பெல்ஜீயத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகளுக்கான சமூகம் என்ற இந்த ஷிப்ட் அமைப்பை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ளது.

உலக அளவில் பெரு நிறுவனங்கள், நாடுகள் இடையேயான பண பரிவர்த்தனையை இந்த அமைப்பு சுலபமாக்குகிறது. இந்த அமைப்பு பணம் எப்போது அனுப்பப்பட்டது, பணம் கணக்கில் எப்போது வந்து சேரும் உள்ளிட்ட தகவல்களை பயனாளர்களுக்கு அனுப்புகிறது.

உலக அளவில் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் 11 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிகள், நிதி நிறுவனங்கள் இந்த அமைப்பை பயன்படுத்தி பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த ஷிப்ட் அமைப்பில் இருந்து ரஷியாவை தடை செய்ய ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடை விதிக்கப்படும் பட்சத்தில் ரஷியா வெளிநாடுகள், பெரு நிறுவனங்களிடையே பண பரிவர்த்தனையில் ஈடுபடுவது நிறுத்தப்படும். இது ரஷியாவின் பொருளாதாரத்திற்கு பேரடியாக விழும்.

அதேவேளை, இந்த தடை விதிக்கப்படும் பட்சத்தில் ரஷியா, சீனாவின் உதவையை நாடலாம். மேலும், கிரிப்டோ கரண்சி எனப்படும் மெய்நிகர் பணத்தின் மூலம் பரிவர்த்தனைகளை ரஷியா மேற்கொள்ளாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷிப்ட் அமைப்பில் இருந்து ரஷியாவை நீக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளிடையே ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது. ஷிப்ட் அமைப்பில் இருந்து ரஷியா நீக்கப்படும் பட்சத்தில் அந்நாடு மிகப்பெரிய பொருளாதார பேரழிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top