News

ரஷியா கைப்பற்றிய கார்கிவ் பகுதியை மீண்டும் மீட்டது உக்ரைன்

 

ரஷியா ராணுவம் கைப்பற்றிய கார்கிவ் பகுதியை மீண்டும் உக்ரைன் படைகள் மீட்டுள்ளது

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ படையில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷியா, போரை தொடங்கியது. முதல் நாளில் ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன.

உக்ரைனில் உள்ள ராணுவ தளவாடங்களை குறிவைத்து இந்த ஆக்ரோ‌ஷ தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உக்ரைன்- ரஷிய எல்லை, பெலாரஸ் நாடு, கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதி ஆகியவற்றில் இருந்து ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடும் சேதம் ஏற்பட்டது

உக்ரைன் மீது ரஷியா ஆக்ரோ‌ஷ தாக்குதல் நடத்துவதால் மக்கள் மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள். பலர் உயிர் தப்பிக்க உக்ரைனில் இருந்து வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்

தலைநகர் கீவ்வில் சண்டை நடந்து வருவதால் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது .உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரத்தை ரஷியா கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  ரஷியா ராணுவம் கைப்பற்றிய கார்கிவ் பகுதியை மீண்டும் உக்ரைன் படைகள் மீட்டுள்ளது.  கார்கிவ் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக  உக்ரைன் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top