News

ரஷிய அதிபர் புதினின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

 

ரஷிய அதிபர் புதினின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்துள்ளன.எனினும் இதனால் தங்களுக்கு ஏற்படும் பொருளாதார சவால்களை சந்திக்க தயாராக இருப்பதாக  புதின் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள புதினின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதேபோல், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி லாவ்ரோவின் சொத்துக்களையும் முடக்கப்பட்டுள்ளது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top