News

ரஷ்யாவில் ஒரே நாளில் 1,66,631 பேருக்கு கொரோனா பாதிப்பு, 704 பேர் உயிரிழப்பு

 

ரஷ்யாவில் ஒரே நாளில் 1.66 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,66,631 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இது, அதற்கு முந்தின நாளில் பதிவான 1,80,456 என்ற எண்ணிக்கையை விட குறைவாகும்.

கொரோனாவுக்கு 704 பேர் உயிரிழந்து உள்ளனர் என அந்நாட்டு மத்திய பொறுப்பு மையம் தெரிவித்து உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 21,833 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

ரஷ்யா முழுவதிலும் மருத்துவமனைகளில் இருந்து 1,37,881 பேர் குணமடைந்து சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top