News

ஹவுதி பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க தயார் நிலையில் அமெரிக்காவின் 6 பைட்டர் ஜெட் விமானங்கள்

 

ஹவுதி பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க தயார் நிலையில் அமெரிக்காவின் 6 பைட்டர் ஜெட் விமானங்கள் அல் தப்ரா பகுதியில் நிறுத்தப்பட்டது.

அமீரகத்தின் தலைநகர் அபுதாபியை நோக்கி குறி வைக்கும் ஹவுதி பயங்கரவாத தாக்குதலை முன் கூட்டியே முறியடிக்க, அமெரிக்காவின் எப்-22 ரேப்டார் பைட்டர் ஜெட் ரக விமானங்கள் அபுதாபிக்கு வருகை புரிந்துள்ளது. ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களான 6 போர்ப்படை விமானங்கள் அல் தப்ரா விமானத்தளத்தில் வந்து தரையிறங்கி உள்ளன. அந்த போர் விமானங்கள் மட்டுமல்லாமல் 2 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். அமீரக ராணுவத்துடன் இணைந்து அமெரிக்க படையினர் செயல்படுவார்கள் என அமெரிக்க வெளியுறவு அலுவலகம் தகவல் அளித்துள்ளது. தொடர்ந்து நவீன தொழில்நுட்பங்களுடன் வான்வழி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஹவுதி படையினர் தாக்க முயற்சிப்பது தெரிய வந்தால், அதற்கு முன்னதாகவே செயல்பட்டு ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்படும். தொடர்ந்து அமீரக ராணுவத்துடன் அமெரிக்க ராணுவமும் பைட்டர் ஜெட் விமானங்களுடன் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க விமானப்படையின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் கிரேய்க் கில்லட் தெரிவித்துள்ளார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top