News

3,500க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் உயிரிழப்பு ; 100 டாங்கிகள் அழிப்பு- உக்ரைன்

 

 

3,500க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் உயிரிழப்பு 14 விமானங்கள், 8 ஹெலிகாப்டர்கள், 102 டேங்குகள் ஆகியவற்றையும் ரஷியா இழந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்குள் நுழைந்துள்ள  ரஷியப் படைகள், கீவ் நகரைக் கைப்பற்ற முன்னேறிவருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 3வது நாளாக தீவிரமடைந்துள்ளது . பொருளாதாரத் தடைகளைத் தாண்டி உலக நாடுகள் ஏதேனும் செய்ய வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் மீதான தாக்குதலின் போது ரஷியப் படைகள் சுமார் 3,500 படைவீரர்களையும் 100க்கும் மேற்பட்ட டாங்கிகளையும் இழந்துள்ளன என்று துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் கூறினார்.

இதுவரை 3,500க்கும் மேற்பட்ட ரஷிய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக, உக்ரைன் ராணுவம் தன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதில், இந்த படையெடுப்பில் ஈடுபட்ட 3,500க்கும் மேற்பட்ட ரஷிய படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 14 விமானங்கள், 8 ஹெலிகாப்டர்கள், 102 டேங்குகள் ஆகியவற்றையும் ரஷியா இழந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் குறித்து ரஷியா இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top