News

உக்ரைனின் ராணுவ பலத்தை முழுமையாக அழிப்பதே போருக்கு முடிவு – ரஷிய அதிபர்புதின்

 

உக்ரைனின் ராணுவ பலத்தை முழுமையாக அழிப்பதே போரை முடிவுக்கு கொண்டு வரும் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. மேலும், ரஷியா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானுடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்த வேண்டும் என வலியுறித்தினார்.

அப்போது, உக்ரைனின் ராணுவ பலத்தை முழுமையாக அழிப்பது மற்றும் கிரிமியா பகுதியை மேற்கு உலக நாடுகள் அங்கீகரிப்பதுமே போருக்கு முடிவுகட்டும்’ என பிரான்ஸ் அதிபரிடம் ரஷிய அதிபர் புதின் கூறினார்..

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top