News

உக்ரைனில் நடைபெறும் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச கிரிமினல் கோர்ட் விசாரணை

 

உக்ரைனில் நடைபெறும் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச கிரிமினல் கோர்ட் விசாரணை நடத்த உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

அதேவேளை, அணு ஆயுதங்களையும் தயார் நிலையில் வைக்க படையினருக்கு ரஷிய அதிபர் உத்தரவிட்டுள்ளதால் 3-ம் உலகப்போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் நடைபெற்று வரும் போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச கிரிமினல் கோர்ட் விசாரிக்க உள்ளது. இந்த விசாரணை விரைவில் நடைபெற்ற உள்ளது என சர்வதேச கிரிமினல் கோர்ட் தலைமை வழக்கறிஞர் கரிம் கான் தெரிவித்துள்ளார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top