News

உக்ரைன் ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து 600 ஏவுகணைகளை ஏவிய ரஷியா …!

 

 

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷியா மொத்தம் 600 ஏவுகணைகளை ஏவியுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், 21-ம் நூற்றாண்டு இதுவரை கண்டிராத உக்கிர போராக மாறி வருகிறது.

ராணுவ கட்டமைப்புகளை தகர்க்கத்தான் நடவடிக்கை என்று சொல்லிக்கொண்டு ரஷியா களம் இறங்கினாலும் முக்கிய நகரங்களை கைப்பற்றி  வருகிறது. ராணுவ கட்டமைப்புகள் மட்டுமின்றி குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள் என தாக்குதலை விரிவுபடுத்தி, சர்வதேச கிரிமினல் கோர்ட்டின் வழக்கை எதிர்கொள்ளும் நிலையை ரஷியா தேடிக்கொண்டுள்ளது.

இந்த 11 நாள் போரில் 15 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாகியா, ஹங்கேரி, மால்டோவா இன்னபிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 12-வது நாளாக எட்டியுள்ள நிலையில் 4 நகரங்களில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.  உக்ரைனில்   கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்தி உள்ளது ரஷியா.

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷியா மொத்தம் 600 ஏவுகணைகளை ஏவியுள்ளது என்று மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.  மேலும் உக்ரைனுக்குள் அதன் போர் சக்தியில் தோராயமாக 95 சதவீதத்தை  செலவு செய்துவிட்டதாக கூறி உள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top