News

சிரியாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து – 11 பேர் பலி

 

 

சிரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

,சிரியா நாட்டின் தலைநகர் டாமஸ்கசின் அல் ஹம்ரா என்ற பகுதியில் மிகப்பெரிய வணிக வளாகம் உள்ளது.

லா மரிடா என்று அழைக்கப்பட்ட அந்த வணிகவளாக கட்டிடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 6 மாடிகளை கொண்ட அந்த வணிக வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் தீ மளமளவென பரவியது.

இந்த தீ விபத்தில் வணிக வளாகத்தில் இருந்த பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனாலும், இந்த தீவிபத்தில் வணிகவளாகத்தில் சிக்கிய 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top