News

புதுக்குடியிருப்பில் மின்சார தடை, எரிபொருள் தட்டுப்பாட்டினை கண்டித்து தீப்பந்த கவனயீர்ப்பு போராட்டம்

 

 

 

நாட்டில் காணப்படும் மின்சார தடை ,எரிபொருள் தட்டுப்பாட்டினை கண்டித்து தீப்பந்த கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று இன்று இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார தடை மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டினை கண்டித்து புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக ஐக்கிய மக்கள் சக்த்தியின் ஏற்பாட்டில் தீ பந்த கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

 

ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் மு.லக்சிகன் தலைமையில் நடைபெற்ற கவனயீர்ப்பில் பொது மக்களும் கலந்துகொண்டு எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்வதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

 

 

குறிப்பாக மின்சாரம் தொடர்ச்சியாக தடைப்பட்டு காணப்படும் நிலையில் வீடுகளில் விளக்கு எரிப்பதற்கு மண்ணெண்ணையினைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை, வாகன சாரதிகள்  நாள் தோறும் தொழிலினை மேற்கொள்ள டீசல் இல்லாத நிலை, உந்துருளி மற்றும் கார் வாகனங்களுக்கான பெற்டோல் தட்டுப்பாடு தொடர்ச்சியாக பல நாட்களாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்..

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top