Canada

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை – கனடா அதிரடி

 

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதித்து கனடா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

அதேவேளை, அணு ஆயுதங்களையும் தயார் நிலையில் வைக்க படையினருக்கு ரஷிய அதிபர் உத்தரவிட்டுள்ளதால் 3-ம் உலகப்போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையில், உக்ரைன் மீதான தாக்குதலையடுத்து பல்வேறு நாடுகள் ரஷியா மீது பொருளாதார ரீதியிலான தடைகளை விதித்து வருகிறது.

இந்நிலையில், ரஷியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய கனடா அரசு அதிரடி தடை விதித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தில் ரஷிய பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதித்தது தொடர்பாக கனட அதிபர் ஜஸ்டின் டூருடோ கூறுகையில், ரஷிய ராணுவத்திற்கு எதிராக போராடும் உக்ரைனின் வீரமிக்க செயலுக்கு கனடா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.

ரஷிய அதிபர் புதின் மற்றும் ரஷிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு லாபம் தரும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு கனடாவில் தடை விதிக்கப்படுகிறது.

மேலும், ரஷிய படையெடுப்பிற்கு எதிரான இந்த போரில் உக்ரைனுக்கு ராணுவ டாங்கி எதிர்ப்பு ஆயுதம் மற்றும் நவீன ஆயுதங்களை கனடா வழங்கும்’ என்றார்.

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு கனடா தடை விதித்ததால் ரஷிய பொருளாதாரத்தில் இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top