On Behalf of KHC OSA “KOKUVIL NIGHT” dinner committee, You are invited to Join us at this dinner. Looking forward to see you at the Dinner.
Find out more »யாழில் கடந்த ஓரிரு மணித்தியாலங்களுக்கு பொழிந்த கடும் மழையில் பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாக தெரியவருகின்றது. குறிப்பாக நாவாந்துறை, பொம்மைவெளி, ஆனைக்கோட்டை, தென்மராட்சி, நாவற்குழி போன்ற இடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் அவலத்தை எதிர்கொண்டுள்ளனர். இரவிரவாகக் கொட்டி வரும் கன மழை காரணமாக வெள்ளம் புகுந்த வீடுகளில் உள்ளவர்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.
Find out more »இலங்கை மின்சார சபையின் மின் விநியோக இணைப்புக்களில் ஏற்பட்ட அதிகூடிய மின் அழுத்தத்தினால் நேற்று முன்தினம் (21.11.2016) நவாலிப் பகுதியில் பல வீடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான மின்சார மற்றும் இலத்திரனியல் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் நவாலி தெற்குப் பகுதியில் பல வீடுகளில் மின் அழுத்தம் சடுதியாக 400 வோல்ற் வரை அதிகரித்துள்ளது. இதனால் வீடுகளில் பாவித்துக் கொண்டிருந்த மின்குமிழ்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கணனிகள், மடிக்கணனிகள் போன்றன வெடித்து சிதறியதுடன் வேறுபல மின் உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. இவ்வாறு 25க்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்த மின் உபகரணங்களும் இலத்திரனியல் பொருட்களும் நாசமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் வீடுகளுக்கான மின்னிணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் குறித்த பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டிருந்தது. நள்ளிரவில் அப்பகுதிக்கு…
Find out more »