Business

ரஷ்யாவிற்கு அமெரிக்கா மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது – புடின்

 

 

ரஷ்யாவிற்கு அமெரிக்கா மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய கடற்படை தினத்தை முன்னிட்டு புனித பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற போர்க்கப்பல்களின் அணிவகுப்பு மரியாதையை புடின் ஏற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து அங்கு கருத்து வெளியிடும் போதே விளாடிமிர் புடின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகில் உள்ள அனைத்து பெருங்கடல்களிலும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த நினைப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேட்டோ படைகளின் கூட்டமைப்பில் ரஷ்ய எல்லையில் உள்ள நாடுகள் இணைவது நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஜிர்கான் ஹைபர்சானிக் ஏவுகணைகள் விரைவில் ரஷ்ய கடற்படையில் இணைக்கப்படும் எனவும் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top