Business

இலங்கையை மீட்க களமிறங்கும் அமெரிக்கா – வழங்கப்பட்ட உறுதிமொழி

சிறிலங்க எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பிளிங்கனுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிளிங்கன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர், சிறிலங்கா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் அடுத்த வருடத்துடன் 75 வருட இராஜதந்திர உறவு பூர்த்தியடைவதாவும், அமெரிக்கா இலங்கைக்கு அன்பளிப்பு, கடன் மற்றும் ஏனைய உதவிகள் என்ற வகையில் 240 மில்லியன் டொலர்களை இதுவரை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த உதவி திட்டங்களையும் ஒத்துழைப்புக்களையும் தொடர்ந்து வழங்க எண்ணியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உலக காலநிலை விடயங்கள் பற்றியும் இலங்கைக்கான திட்டங்கள் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடியதாக பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்காவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடுகள் மற்றும் அதற்கு அமெரிக்கா வழங்கும் ஒத்துழைப்புக்கள் குறித்தும் அலி சப்ரி இலங்கையின் நன்றியை தனது சார்பாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top