Business

இம்ரான்கானை கைது செய்ய போலீசார் தீவிரம்: ஆதரவாளர்கள் போராட்டம்

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் அவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி நடந்த பேரணியில் மாஜிஸ்திரேட் ஜெபா சவுத்ரி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான்கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கு விசாரணையில் ஆஜராக இம்ரான்கான் விலக்கு கேட்டு இருந்தார். ஆனால் அவருக்கு கோர்ட்டு விலக்கு அளிக்கவில்லை. இந்த வழக்கு விசாரணையில் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

இதற்கிடையே இவ்வழக்கு நேற்று இஸ்லாமாபாத் மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது இம்ரான்கானுக்கு நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார். அவரை கைது செய்து வருகிற 29ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், இம்ரான் கானை கைது செய்வதற்காக அவரது வீடு அமைந்துள்ள ஜமான் பூங்கா அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்பட்ட கலவரத்தில் கல்வீச்சு, இதற்கிடையே இம்ரான் கானின் கட்சித் தொண்டர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே காயமடைந்துள்ளனர். தடியடி போன்ற சம்பவங்களால் பலர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவுக்குள் இம்ரான் கான் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்ரான்கான் கைது செய்யப்படும் பட்சத்தில் கலவரம் வெடிக்க வாய்ப்பு உள்ளதால், இஸ்லாமாபாத், கராச்சி உள்பட நாடு முழுவதும் முக்கிய இடங்களில் அதிகளவில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேப் போன்று, இம்ரான் கானின் வீட்டிற்கு செல்லும் சாலையில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூங்கா ஒன்றில் நடந்த பேரணியின்போது, காவல்துறை பயன்படுத்தி, நீதிபதி ஜெபா சவுத்ரி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதற்காக அதிகாரிகளையும் நீதித்துறையையும் ‘பயங்கரமான’ என்ற வார்த்தையைப் இம்ரான் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top