Business

தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் பலி! 20 பேர் மாயமானதால் அதிர்ச்சி

நியூசிலாந்தில் தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் வரை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தின் மத்திய வெலிங்டனில் உள்ள நியூடவுன் நகரில் செய்யப்பட்டு வரும் தங்கும் விடுதி ஒன்றில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்றாவது மாடியில் ஏற்பட்ட பயங்கர தீயை அணைக்க உடனடியாக தீயணைப்பு மற்றும் அவசர பணியாளர்கள் அழைக்கப்பட்டனர்.

இதனையடுத்து தீ விபத்தில் சிக்கியவர்களில் 10 பேர் பலியாகினர். மேலும் 52 பேர் தீயணைப்பு வீரர்களால் வெளியேற்றப்பட்டனர். குறைந்தபட்சம் 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் 20 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறிது. சுமார் 15 பேர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், தங்கும் விடுதியில் வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சுமார் 92 பேர் தங்கும் வசதி உள்ள இந்த விடுதியில் தீ விபத்து ஏற்பட்டபோது, உள்ளே எத்தனை பேர் இருந்தனர் என்பது தெளிவாக தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்டபோது தப்பிக்கும் முயற்சியில், சன்னலில் இருந்து குதிக்க முயன்றபோது ஒருவர் காயமடைந்ததாகவும், ஐந்து பேர் வான்வழி கருவியைப் பயன்படுத்தி பணியாளர்களுடன் கூரையில் இருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறுகையில், ‘இது உண்மையில் சோகமான சூழ்நிலை. கட்டிடத்தில் இருந்து அனைவரும் அகற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டதை பணியாளர்கள் உறுதி செய்த பிறகு, தீ விபத்திற்கான காரணம் ஆராயப்படும். எங்கள் எண்ணங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் இன்றைய துயரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top