அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ஆட்சி கால இரகசிய ஆவணங்கள் குளியலறையில் சிக்கியுள்ளது.
இவ்வாறு சர்ச்சையில் சிக்கிய அணு ஆயுத இரகசிய ஆவணங்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
டிரம்ப் 37 கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாகவும், இதில் 31 எண்ணிக்கையிலான தேசிய பாதுகாப்பு தகவல்களை வேண்டுமென்றே தக்கவைத்துக்கொண்டது.
இந்த நிலையில் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டில் டிரம்ப் வீட்டில் இருந்து அதி முக்கியம் வாய்ந்த இரகசிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
100-க்கும் மேற்பட்ட இரகசிய ஆவணங்கள் மற்றும் 11 ஆயிரம் அரசு ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் பாதுகாப்பற்ற முறையில் வைத்து கையாண்டதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் பொய் கூறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக எதிர்வரும் 13-ந் திகதி மியாமி நீதிமன்றில் டிரம்ப் நேரில் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளது.
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பிரிவில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 100 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், குற்றபத்திரிகையில் டிரம்ப் தனது புளோரிடா கிளப்பில் குளியலறை மற்றும் ஷவரில் இரகசிய ஆவணங்களை வைத்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.