பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் 200 ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற நான்கு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து A13 Motorway-3ல் புதன்கிழமை மாலை 7:30 மணியளவில் நடந்தது.
இந்த பேருந்துகளில் கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவத்தினர் இருந்தனர். விபத்தில் ஒருவர் தீவிரமாக காயமடைந்தார், மேலும் 36 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதில் நான்கு பேர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 30 பேர் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தின் காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், ஒரு சிறிய வாகனம் பேருந்துகளுக்கு இடையில் செல்ல முயன்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என லு பிகாரோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
50 தீயணைப்புத் துறையினர் உட்பட 30 மீட்புப் படையினர் விரைந்து செயலில் ஈடுபட்டனர். பாதிக்கப்படாத வீரர்கள் மாற்று பேருந்துகளில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு, “காயமடைந்த வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் ஆறுதல்” தெரிவித்துள்ளார்.