Business

சொந்த மண்ணில் பலத்த அடிவாங்கிய ராஜபக்ச தரப்பு : முடக்கப்பட்ட அரசியல் சாம்ராஜ்யம்

இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு விடயமாக ராஜபக்ச குடும்பத்தினரின் அரசியல் சாம்ராஜ்யம் கடந்த காலங்களில் மேலோங்கி காணப்பட்டது.

இந்தநிலையில், இந்த ஊழல் ஆட்சியை எப்போது வேறோடு அழிக்கலாம் என காத்து கொண்டிருந்த மக்களுக்கு பெரும் வாய்ப்பாக பொருளாதார நெருக்கடியை அடுத்து வந்த தேர்தல் அமைந்தது.

இதில், முற்றாக ராஜபக்ச குடும்பத்தினர் அடியோடு அளிக்கப்பட்டு ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்ட நிலையில் அது நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர்ந்தது.

இதையடுத்து, விட்டால் தமது அரசியல் வாழ்க்கை முற்றாக அழிந்து விடும் என பயந்த ராஜபக்ச தரப்பு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தம்மை நிலை நிறுத்துவதற்காக பலதரப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதாவது, ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என ஆட்சியை தம்வசப்படுத்திய தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் வெற்றி பெற அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது.

ஒப்பிட்டளவில் எல்லா இடத்திலும் தேசிய மக்கள் சக்திக்கான வாய்ப்பு காணப்பட்டதா என்பது சில மாவட்டங்களை பொறுத்த வரையில் கேள்விக்குறியாகத்தான் காணப்பட்டது.

காரணம், நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை தேர்தெடுத்த தமிழ் மக்கள், நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் காட்சிகளையே தேர்தெடுத்து இருந்தனர்.

இது பாரிய அடியாக தேசிய மக்கள் சக்திக்கு காணப்பட்டது இருப்பினும் தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளை தேர்தெடுப்படுத்து என்பது பாரம்பரிய விடயமாக காணப்பட்டமையினால் அநுரவிற்கு இது எதிர்பார்த்த விடயமாகவும் இருந்து இருக்கலாம்.

இந்தநிலையில், அந்த அந்த பிரதேச மக்கள் அவர்களது பாரம்பரிய காட்சிகளை தேர்தெடுத்திருந்த போதிலும், அங்கும் ராஜபக்ச குடும்பத்தினர் அடிவாங்கி உள்ளமை பாரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், அம்பாந்தோட்டை (Hambantota) மாவட்டத்தில் 88 வருடங்களுக்கு பின்னர் ராஜபக்ச குடும்பத்தினர் அரசியலில் தமது பிரதிநிதித்துவத்தை இழந்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் தற்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ராஜபக்ஸக்களின் கோட்டையான மெதமுலன தேர்தல் தொகுதி, 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவிடம் விழுந்துள்ளது.

வீரக்கெட்டிய பிரதேச சபைக்குரிய மெதமுலன தேர்தல் தொகுதியில் 1115 வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட நிலையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன வெரும் 768 வாக்குகளை பெற்றுள்ளது.

அரசியலை பொறுத்த மட்டில் மெதமுலன அதிகாரத்தை ராஜபக்ஸ குடும்பத்தினர் வைத்திருந்தனர்.

எனினும், தற்போது இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அந்த அதிகாரம் இல்லாமல் போய்விட்ட நிலையில் சொந்த இடத்திலேயே இது ஒரு பாரிய அடியாக அவர்களுக்கு அமைந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் என மக்கள் ராஜபக்ச ஆட்சியினை புறக்கணித்திருப்பது அவர்களது அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top