அமெரிக்காவின் டெக்சாஸில் கனமழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 15 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோடைகால முகாமிற்கு சென்ற மாணவிகளில் 20 பேர் மாயமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர்களை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய டெக்சாஸில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் இன்னும் போராடி வருகின்றனர்.