Business

ஜப்பான் அணு மின் நிலையத்தின் மீது பறந்த ட்ரோன்கள்: பாதுகாப்பு சவாலாக அமைந்த சம்பவம்

ஜப்பான் அணு மின் நிலையத்தில் அடையாளம் தெரியாதா 3 ட்ரோன்கள் பறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கென்காய் அணு மின் நிலையத்தில் நேற்றையதினம்(26) இரவு மூன்று ட்ரோன்கள் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை ஜப்பானின் அணுக்கழிவு மேற்பார்வை ஆணையம் (NRA) வெளியிட்டுள்ளது.

ஜப்பான் அணு மின் நிலையத்தின் மீது பறந்த ட்ரோன்கள்: பாதுகாப்பு சவாலாக அமைந்த சம்பவம் | Three Drones Detected In Japan Nuclear Plant

 

இந்த மின் நிலையத்தில் நான்கு அணு ஒழுங்குபடுத்திகளை உள்ள நிலையில் அதில் இரண்டு தற்போது செயலிழக்கச் செய்யப்படும் நிலையில் உள்ளன.

மீதமுள்ள இரண்டும் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றி செயல்படுகின்றன. ஜப்பானில் அணு மின் நிலையங்கள் அருகே அனுமதியின்றி ட்ரோன் இயக்கம் குற்றமாகும், என NRA மற்றும் பொலிஸார் தெரிவித்துள்ளன.

ட்ரோன்கள் காணப்பட்டதையடுத்து உடனடியாக அறிக்கை வழங்கப்பட்டது.

ஆனால் மின் நிலையத்தின் வளாகத்தில் எந்தவித அசம்பாவிதமும் இல்லை. ட்ரோன்கள் உள்ளே நுழைந்ததற்கான ஆதாரமும் இல்லை என NRA-வின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ட்ரோன்கள் எங்கு சென்றன என்பது தெரியவில்லை.

ஜப்பான் அணு மின் நிலையத்தின் மீது பறந்த ட்ரோன்கள்: பாதுகாப்பு சவாலாக அமைந்த சம்பவம் | Three Drones Detected In Japan Nuclear Plant

அவற்றை இயக்கியவர்கள் யார் என்றும் தற்போது அடையாளம் காணப்படவில்லை என பொலிஸ்துறை செய்தித் தொடர்பாளர் மசாஹிரோ கோஷோ கூறியுள்ளார்.

இந்த சம்பவம், 2011-ஆம் ஆண்டு உருவான ஃபுகுஷிமா அணு விபத்தின் பின்னர், அணு உற்பத்திக்கு மீண்டும் திரும்பியுள்ள ஜப்பான் அரசுக்கு ஒரு பாதுகாப்பு சவாலாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top