Business

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்!

 

உக்ரைனின் தொழில் மூலோபாய நகரான டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்-கில்(Dnipropetrovsk) ரஷ்ய படைகள் முன்னேற்றியுள்ளனர்.

உக்ரைன் – ரஷ்யா போரின் புதிய நடவடிக்கையாக முக்கிய தொழில் மூலோபாய நகரான டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் நகரில் ரஷ்ய படைகள் முன்னேறி தங்கள் தளங்களை உருவாக்க முயற்சித்து வருவதாக உக்ரைனிய படைகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த பகுதியில் ஜூன் மாதம் தாக்குதலை தொடங்கிய ரஷ்ய படைகள் குறுகிய காலத்திலேயே நகரை கைப்பற்றி விட்டதாக அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது தான் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்திற்குள் ரஷ்ய படைகள் நுழைந்து இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனிய படைப்பரிவை சேர்ந்த அதிகாரி விக்டர் ட்ரெகுபோவ் தெரிவித்த தகவலில், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் நகர் மீது நடத்தப்பட்ட முதல் பெரிய தாக்குதல் இது என கூறியுள்ளார்.

மேலும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் நகருக்குள் ரஷ்ய படைகள் நுழைந்து இருந்தாலும், அவற்றின் முன்னேற்றம் தொடர்ந்து தடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! | Russia Entered Dnipropetrovsk Region Ukraine Admit

கைப்பற்றப்பட்ட இரண்டு கிராங்கள்

கடந்த செவ்வாய்க்கிழமை டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்-வின் உட்புற எல்லையில் அமைந்துள்ள சபோரிஸ்கே(Zaporizke) மற்றும் நோவோஹ்ரிகோரிவ்கா(Novohryhorivka) ஆகிய கிராமங்களை கைப்பற்றி விட்டதாக ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன.

ஒருவேளை டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் நகரம் முழுவதுமாக ரஷ்ய படைகளின் கைகளுக்கு சென்றுவிட்டால் அது உக்ரைனுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top