Business

ரஷ்யாவை கதிகலங்க வைத்த உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்

ரஷ்யாவின் முக்கியமான எண்ணெய் நிலையம் மற்றும் வெடிபொருள் தொழிற்சாலையை ட்ரோன் மூலம் தாக்கியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

மேற்கு ரஷ்யாவில் உளள் நிஸ்னி நோவ்கோரோடு மாகாணத்தில் உளள் ஸ்வெர்ட்லோவ் வெடிபொருள் தொழிற்சாலை தாக்கப்பட்டதாக உக்ரைன் ஜெனரல் ஸ்டாஃப் தெரிவித்துள்ளார். அங்கு வெடிச்சத்தம் கேட்டதாகவும், தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யப் படைகளுக்கு வெடிபொருட்கள் வழங்கும் முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாக இந்த தொழிற்சாலை திகழ்ந்து வருகிறது.

ரஷ்யாவை கதிகலங்க வைத்த உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் | Ukraine Claims Drone Strikes On Russian

 

கிரீமியாவில் உள்ள எண்ணெய் நிலையத்தையும் ட்ரோன் தாக்கியதாவும், இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கிரீமியா உள்பட 14 மாகாணத்தில் உக்ரைன் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதை ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.

ரஷ்யாவை கதிகலங்க வைத்த உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் | Ukraine Claims Drone Strikes On Russian

 

251 ட்ரோன்கள் வான்பாதுகாப்பு சிஸ்டம் மூலம் தடுத்து அழிக்கப்பட்டதாக தெரிவித்த ரஷ்யா, போர் தொடங்கிய பிறகு உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் இதுவாகும் எனவும் தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top