Business

பங்களாதேஸில் எரிந்து நாசமாகிய 1,500 வீடுகள்

பங்களாதேஸின் டாக்காவில் வரிசையாக இருந்த வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 1,500 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.

டாக்காவில் உள்ள குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீயை அணைக்க சுமார் 19 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தீயை அணைக்க சுமார் ஐந்து மணி நேரம் ஆனது என்று வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவித்துள்ளன.

மேலும் 80000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top