Business

கோவாவில் இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் பலி

கோவாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் வரை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பிரபலமான சுற்றுலா தளமான கோவாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஆர்போரா பகுதியில் அமைந்துள்ள பிரிச் பை ரோமியோ லேன்(Birch by Romeo Lane) என்ற இரவு விடுதியில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோவாவில் இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் பலி | Goa Night Club Fire Incident 25 Dead

இந்த சம்பவத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் கோவா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான முதற்கட்ட தகவலில், பாதிக்கப்பட்டவர்களில் பலர் புகை மூட்டத்தால் ஏற்பட்ட மூச்சுத் திணறலில் பலியாகியுள்ளனர்.

நள்ளிரவு 1 மணியளவில் நடந்த இந்த சம்பவத்துக்கு எரிவாயு சிலிண்டர் வெடிப்பே காரணம் என பொலிஸாரால் சந்தேகிக்கப்பட்டது.

 

 

ஆனால் அந்த சந்தேகங்கள் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டு, விபத்துக்கான உண்மையான காரணத்தை பொலிஸார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

தீ விபத்துக்குள்ளான இரவு விடுதி கட்டாய தீயணைப்பு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, இரவு விடுதி சீல் வைக்கப்பட்டு தற்போது அதன் உரிமையாளர் மற்றும் நிர்வாகத்திடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடையாளம் காணப்பட்ட நபர்கள்

கோவாவில் இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் பலி | Goa Night Club Fire Incident 25 Dead

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 4 சுற்றுலாப் பயணிகள் மற்றும், 14 விடுதி ஊழியர்கள் என 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 7 பேரின் அடையாளம் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top