இலங்கைக்கான கனடிய தூதுவர் இசபெல்லா மார்டீன் யாழ்ப்பாணத்திற்கு இன்று(26) விஜயம் செய்துள்ளார்
வலிகாமம் மேற்கு பகுதியில் டித்வா புயலால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் செயற்திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைப்பதற்காகவே இன்றைய தினம் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டார்
இந்த செயல் திட்டத்தின்படி கர்ப்பிணித்தாய்மார்களுக்கான நிவாரணப் பொதி மற்றும் ஏனைய குடும்பங்களுக்கான சுகாதாரப் பொதி மற்றும் சுய பராமரிப்பு பொதி உட்பட நுளம்பு வலைகள் போன்றவையும் வழங்கி வைக்கப்பட்டன


வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் தலைமையில் மதியம் 12.00 மணியளவில் ஆரம்பமாகிய இந்த நிகழ்வின் போது வலி .மேற்கு பிரதேச செயலகத்தில் இயங்குகின்ற அனர்த்த நிவாரண மீட்பு குழுவினர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்
ஒட்டு மொத்தமாக இந்த செயல் திட்டம் world vision நிறுவனத்தின் ஊடாக அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது

இது வலிகாமம் மேற்கில் உள்ள 15 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது இத்திட்டத்துக்கான நிதி அனுசரணையை கனேடியன் அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
