Business

டெக்சாஸ் வெள்ளம்: பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு.

அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91ஆக உயர்ந்துள்ளது.

இந்த தகவலை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

கடந்த 3ஆம் திகதி அமெரிக்காவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் டெக்சாஸ் நகரம் முழுமையாக நீரில் முழ்கியது.

இந்நிலையில், குறித்த அனர்த்தத்தின் பின்னர், மீட்பு பணியாளர்கள் உட்பட சுமார் 300 பேர் தரையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

டெக்சாஸில் ஏற்பட்ட பேரனர்த்தம்.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை | Us Texas Flood Death Toll 91

இதனை தொடர்ந்து, 21 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் பலர் பலியாகி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது வரை, 165 பேரை மீட்பு பணியினர் காப்பாற்றியுள்ளதாகவும் அதேவேளை வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top