Business

காசா மீது தாக்குதல் : இஸ்ரேல் நோக்கி விரைந்த அமெரிக்கவின் இராணுவ கப்பல்

காசாவை (Gaza) அழித்து தரைமட்டம் ஆக்குவதற்காக அமெரிக்கா (United States) இஸ்ரேலுக்கு இராணுவ தளபாட கப்பல் தொகுதி ஒன்றை அனுப்பியுள்ளது.

இது தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளதுடன், சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

இஸ்ரேலிய இராணுவத்திற்கான டஜன் கணக்கான D9 புல்டோசர்கள் அமெரிக்காவிலிருந்து பல மாத தாமதங்களுக்குப் பிறகு இஸ்ரேலுக்கு வந்து சேர்ந்துள்ளது.

ஹைஃபா துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பலில் இருந்து இஸ்ரேல் வந்தடைந்த கேட்டர்பில்லர் D9 புல்டோசர்கள் மற்றும் IDF தரைப்படைகளுக்கான பிற உபகரணங்கள் இறக்கப்படும் காட்சிகளும் குறித்த காணொளியில் காணப்படுகிறது.

காசா மீது தாக்குதல் : இஸ்ரேல் நோக்கி விரைந்த அமெரிக்கவின் இராணுவ கப்பல் | Us Sends Military Equipment To Israel

இதேவேளை, கடந்த நவம்பரில், காசாவில் வீடுகளை இடித்துத் தள்ள பாரிய வாகனங்களை IDF பயன்படுத்தியதால், D9 புல்டோசர்களின் விற்பனையை பைடன் நிர்வாகம் நிறுத்தி வைத்தது.

ஹமாஸால் வீடுகள் பயன்படுத்தப்பட்டதாக IDF கூறியதுடன், பயங்கரவாதக் குழு பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியது.

ட்ரம்ப் பதவியேற்றதும், இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையைத் தடுக்க முந்தைய நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள் ரத்துச் செய்யப்பட்டு மீண்டும் ஆயுதம் வழங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

 

காசா மீது தாக்குதல் : இஸ்ரேல் நோக்கி விரைந்த அமெரிக்கவின் இராணுவ கப்பல் | Us Sends Military Equipment To Israel

கடந்த அக்டோபர் 7, 2023 அன்று போர் தொடங்கியதிலிருந்து, இன்றுவரை 870 கார்கோ விமானங்களும் 144 கப்பல்களும் 100,000 டன்களுக்கும் அதிகமான ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

இஸ்ரேலின் வரலாற்றில் அமெரிக்காவிடமிருந்து பெற்ற மிகப்பெரிய இராணுவ உபகரண உதவி இவையாகும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top