Business

ஜம்மு காஷ்மீரில் திடீர் வெள்ளப்பெருக்கு! இதுவரை 46 பேர் பலி – பலரின் நிலை கவலைக்கிடம்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக 46 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சஷோதி கிராமம் மச்சைல் மாதா புனித யாத்திரை செல்வதற்கான தொடக்க புள்ளியாகும்.

மேகவெடிப்பு காரணமாக இதுவரை 46 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

PTI தகவலின் படி, 46 உடல்களை மீட்பு பணியாளர்கள் வெளியே எடுத்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

இடிபாடுகள் மற்றும் சேறுகளில் இருந்து 167 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். இவர்களில் 38 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top